நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சென்னையில் அளித்த பேட்டியொன்றில் "ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவதை வருக, வருக என வரவேற்கிறேன். தி.மு.க செயல் தலைவர், சிறப்பான எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
தி.மு.க சீட் தந்தால் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயார். பேருந்துக்கட்டண உயர்வை எதிர்த்து வரும் 29-ம் தேதி தி.மு.க நடத்தும் போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன்.
நான் பிறந்ததில் இருந்தே அரசியலில் இருக்கிறேன். அரசியலில் இறங்குமாறு எனக்கு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.