பிப்ரவரி 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், தற்போது அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த தனியார் கல்லூரியொன்றில் கலந்து கொண்ட கமல், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில்," நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறவில்லை. நீங்கள் வாருங்கள் என்று கூறியதால் வந்தேன்.
அமைதியான முறையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்ற முறையில் காந்திதான் எனக்கு பிடித்த தலைவர். அதேபோல, காமராஜர், எம்.ஜி.ஆர், பெரியார், கருணாநிதி போன்ற தலைவர்களையும் எனக்குப் பிடிக்கும்.
சும்மா இருங்கள் எதுவும் பேசக்கூடாது என்பது ஜனநாயகமா?. 'வறுமையின் நிறம் சிவப்பு', 'தேவர் மகன்', 'அன்பே சிவம்' போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது," என்றார்.