RK Nagar legislator TTV Dhinakaran on Wednesday took to Twitter to condemn the lathicharge against college students who protested the hike in bus fares. Hundreds of students, affected by the hike, have been protesting against the Tamil Nadu government’s decision in a peaceful manner, Dhinakaran said. Dhinakaran slammed the police for using the lathicharge against the students and attempting to thwart their protests.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை ரத்து செய்யச் சொல்லி அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 24, 2018
இந்தக் கட்டண உயர்வால் மாணவ மாணவிகளும் அவர்களது குடும்பமும் பாதிக்கப்படுவதால், கல்லூரி மாணவ மாணவிகளும் அரசின் முடிவுக்கு எதிராக அறவழியில் போராடி வருகிறார்கள்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 24, 2018
இவர்களின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளிக்காமல், போராடும் மாணவ சமுதாயத்தினர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களின் போராட்டத்தை அடக்க முயல்கிறார்கள்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 24, 2018
இத்தகைய காவல்துறை அத்துமீறலில் மதுரை திருமலை நாயக்கர் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட மாநிலம் முழுக்க பல நூறு பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வருகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 24, 2018