பேருந்துக்கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கட்டண உயர்வைத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதுமிருந்து தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கு குறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு, "பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களைப் பாதிக்கிறது என்றாலும், நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது," எனக்கூறி இந்த வழக்கினை முடித்து வைத்துள்ளது.
மேலும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் புதிய கட்டண அட்டவணையை ஒட்டுமாறு, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.