கேரி பேக்கை 4 மாதமாக வயிற்றுக்குள் கேரி செய்த திரைப்பட தயாரிப்பாளரின் 12 வயது மகன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 08, 2019 02:43 PM
சென்னை சின்மயா நகரைச் சேர்ந்தவர் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கஸாலி என்பவர்.
இவரது 7-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மகன் ஹாரிஸ் அகமது கடந்த 4 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளதால் குடும்பமே பல விதமான மருத்துவ பரிசோதனைகளை எடுத்ததோடு, இரவு பகலாக பள்ளியிலும் வீட்டிலும் ஹாரிஸ் வயிற்று வலியால் துடித்ததைப் பார்த்து வெதும்பியிருந்துள்ளனர்.
அப்படியான சூழலில்தான் ஹாரிஸ் தன் வீட்டில் இருக்கும்போது திடீரென பாத்ரூமுக்கு ஓடிச்சென்று வாந்தி எடுத்துள்ளான். அப்போது சிறுவனின் கையில் வந்ததோ ஒரு கேரி பேக். ஆம், வயிற்றில் இருந்துதான் அந்த கேரி பேக் வாந்தியின் வழியே வெளிவந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த ஹாரிஸ் பெற்றோரிடம் தெரிவித்தபோது நம்பாத பெற்றோர் மீண்டும் அவர்களின் கண்முன்னே ஹாரிஸ் வாந்தி எடுத்தபோது அதிர்ந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அல்ட்ராசோனிக், எக்ஸ்ரே சோதனைகளை எடுத்து பார்த்ததில் இனி சிறுவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக வயிற்று வலிக்கு காரணம் அல்சர் என நினைத்து அதற்கான ட்ரீட்மெண்ட்களை பின்பற்றிய ஹாரிஸின் குடும்பத்துக்கு தற்போதுதான் ஹாரிஸின் வயிற்றில் கேரிபேக் போயுள்ள உண்மை புலப்பட்டது. நிச்சயம் பள்ளி சார்ந்த பகுதிகளில் ஸ்னாக்ஸ் சாப்பிடும்போது இப்படி நடந்திருக்க வேண்டும் என்று கஸாலி கூறுகிறார். மேலும் தன் மகனைப் போல் யாருக்கும் நடக்கக்கூடாது, இதுபற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.