ஏர்போர்ட்டில் வைத்து ஜெகன்மோகனைத் தாக்கிய நபர்.. காரணத்தை மட்டும் கேட்காதீங்க!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 25, 2018 04:57 PM
![YSR Congress party President Jaganmohan Reddy Attacked Vizag airport YSR Congress party President Jaganmohan Reddy Attacked Vizag airport](https://i9.behindwoods.com/news-shots/images/tamil-news/ysr-congress-party-president-jaganmohan-reddy-attacked-vizag-airport.jpg)
விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் வைத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். செல்பி எடுப்பது போல அருகில் வந்து திடீரென்று அந்த இளைஞர் இப்படி செய்ததால், அனைவருமே ஷாக் ஆகியுள்ளனர்.
இந்தநிலையில் போலீஸ் விசாரணையில் இந்த தாக்குதலின் பின்னணி மற்றும் காரணம் என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது.
அதில் அந்த வாலிபர் பெயர் ஸ்ரீநிவாஸ் என்பதும், அவர் ஒய்எஸ்ஆர் கட்சியின் உறுப்பினர் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி செய்தால் ஜெகன்மோகன் மீது அனுதாப அலை ஏற்படும். அவர் முதல்வர் ஆவார் என்பதால் அப்படி செய்தேன்,'' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த தாக்குதல் குறித்து ஜெகன்மோகன்,'' இதுபோன்ற செயல்களால் மக்கள் பணி செய்வதில் இருந்து என்னைத் தடுக்க முடியாது. நான் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன்.இப்போது நான் நலமாக இருக்கிறேன்.என்மீது அக்கறை கொண்டவர்கள் கவலைப்பட வேண்டாம்,'' என தெரிவித்துள்ளார்.
#Watch #jaganmohanreddy attacked at Vizag airport pic.twitter.com/WjfQCMvJ1N
— Telangana Today (@TelanganaToday) October 25, 2018
![](https://www.behindwoods.com/images/spacer.gif)