ஆடைக்குள் பாம்பு புகுந்தது தெரியாமல்.. அரை மணி நேரம் பைக் ஓட்டிய இளைஞர்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 11, 2018 05:23 PM

தனது ஆடைக்குள் பாம்பு புகுந்தது தெரியாமல் இளைஞர் பைக் ஓட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தி இந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் வீரேஷ் கடமணி(32), தனது ஹோட்டலுக்கு காய்கறி வாங்க நேற்று முன்தினம் மார்க்கெட் சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த பேண்டிற்குள் ஏதோ ஊர்வது போன்று இருந்துள்ளது.
அப்பகுதியில் மழை பெய்திருந்ததால் தண்ணியாக இருக்கும் என்று எண்ணி அலட்சியமாக இருந்து விட்டார். காய்கறி வாங்கிக்கொண்டு திரும்பி வரும் வழியில் பாம்பின் வால்பகுதி அவரது பேண்டிற்கு வெளியே தெரிந்துள்ளது. உடனே பைக்கை கீழே போட்டுவிட்டு, அருகில் உள்ள ஒரு கடைக்குள் சென்று தனது பேண்ட்டை கழற்றி வீசியுள்ளார். அப்போது,அவரின் பேண்ட்டில் இருந்து 2 அடிநீளத்தில் ஒரு பழுப்பு நிறத்தில் பாம்பு ஒன்று வெளியே ஓடியுள்ளது.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் பாம்பினை அடிக்க முயன்றபோது அது அருகிலிருந்து கழிவுநீர்த்தொட்டியில் ஓடி மறைந்து விட்டது. தொடர்ந்து வீரேஷை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
