உறவினர் தொல்லை.. மாப்பிள்ளை இல்லை.. தனக்குத்தானே திருமணம் செய்த பெண்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 10, 2018 08:54 PM
வளர்ந்து வரும் குடியரசு நாடுகளில் உள்ள குடிமகன்களின் தலையாய கடமை திருமணம் செய்துகொள்வது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் உகாண்டாவை சேர்ந்த லுலு ஜெமிமா எனும் 32 வயது பெண், வீட்டில் திருமணம் செய்யச் சொல்லி தொந்தரவு செய்ததாலும், ஆனால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகும் வாழ்க்கையில், தனக்கு அதிக வயது என்பதால் மாப்பிள்ளை கிடைப்பது உள்ளிட்ட பலவகை சிக்கல்கள் உள்ளதாலும், குறிப்பாக பொருளாதார சிக்கல்கள் உள்ளதாலும் தனக்குத்தானே திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியதோடு இந்தத் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது 32-வது பிறந்த தினத்தில் இத்தகைய முடிவை எடுத்து தனக்குத்தானே திருமணம் செய்துகொண்டுள்ள ஜெமிமாவின் இந்த சுய-திருமணத்தில் அவரது பெற்றோர்கள் பங்கேற்கவில்லை என்றாலும், பிறகு தன் அம்மாவிற்கு போன் செய்து நிலையை விளக்கி புரியவைத்துள்ளார் ஜெமிமா. அதே நேரம் இணையவாசிகள் பலரும் அவரது இந்த துணிச்சலான, வெளிப்படையான, பொதுப்புத்தியை உடைக்க முன்வந்துள்ள முடிவினை ஆதரித்து ஊக்கப்படுத்தியுள்ளனர்.
இதுபற்றி கூறும் லுலு ஜெமிமா, ‘நான் என்னை நன்றாக பார்த்துக்கொள்ளும் அக்கறையுள்ள ஒருவரான என்னையே திருமணம் செய்துள்ளேன். இனியும் இன்று முதல் நான் திருமணம் ஆனவள். நானே மனைவி- நானே மாப்பிள்ளை எனும் ஒரு இலக்கு நிறைவேறியது’ என்று கூறியுள்ளார்.