16 வயது சிறுமியை நடுரோட்டில் வைத்து அடித்த பெண்.. விசாரணையில் ’திடுக்’ உண்மைகள்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 15, 2018 07:05 PM
வேலூரில் 16 வயது பெணணை, பொது இடத்தில் வைத்து 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், அடித்ததைக் கண்ட பொதுமக்கள், அந்த இளம் பெண்ணை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நிஷாந்தினி இருவரிடமும் விசாரணை நடத்திய பிறகுதான் தெரியவந்தது, பெண்ணை அடித்தவர் அவருடைய அம்மா இல்லை, உறவினர் என்றும், அந்த பெண்மணியின் பெயர் முஸ்கான் என்பதும்.
உடனே வேலூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட முஸ்கானிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் வெளிவந்தவை இன்னும் அதிர்ச்சிகரமான உண்மைகள். முஸ்கான் தனது உறவினரின் 16 வயது மகளான இந்த இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கள்ளத் தோணிமூலம் வங்கதேசத்தில் இருந்து பெங்களூர், ஆந்திராவின் சித்தூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் திருப்பூருக்கு வந்து பனியன் கம்பெனியில் இருவரும் பணிபுரிந்துள்ளனர். இந்த நிலையில் இளம் பெண்ணை அழைத்துக்கொண்டு வேலூருக்கு வந்தபோது முஸ்கான், சிறுமியை பாலியல் குற்றங்களில் ஈடுபடச் சொல்லி வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி எதிர்ப்பு காட்டவும், முஸ்கான் சிறுமியை அடித்துள்ளார். அப்போதுதான் பிடிபட்டுமுள்ளார்.
இதனையடுத்து, பாலியல் குற்றங்களில் ஈடுபடச் சொல்லி, 16 வயது பெண்ணை வலியுறுத்தி, அடித்து துன்புறுத்திய முஸ்கானை, பாஸ்கோ சட்டத்தில் கைது செய்துள்ள போலீசார் மேற்கொண்டு சிறுமியை உறவினர்களிடம் ஒப்படைக்கவும், முஸ்கான் வேறு எந்த பெண் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்பதை கண்டறியவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.