"நீண்ட நேர செல்போன் பயன்பாட்டால்" பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 23, 2018 10:05 PM
Woman using cellphone too much can\'t stretch her fingers

மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக செல்போன் மாறிவிட்டது.ஆனால் அதுவே சில நேரம் நமக்கு பாதகமாகவும் அமைந்துவிடுகிறது.அதுபோல் ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவின் சங்கிஷா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தொடர்ந்து ஒரு வார காலம் நீண்ட நேரமாக செல்போன் பயன்படுத்தியதால் தனது கைவிரல்களை அசைக்க முடியாமல் தவித்துள்ளார்.

 

பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பெண் ஒரு வாரமாக பணியில் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நாட்களில் அவர் விடாமல் தனது செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். தூங்கும் நேரத்தில் மட்டுமே அவர் செல்போனை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளார்.

 

சில நாட்கள் கழித்து, அவர் தனது வலது கையில் பலத்த வழி ஏற்படுவதை உணர்ந்துள்ளார். மேலும், அவரது விரல்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியபடியே அப்படியே செயல் இழந்து நின்றது. அவரால் விரல்களை அசைக்க கூட முடியவில்லை.மிகவும் பயந்து போன அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 

அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்  "டெனோசைனோவிடிஸ் - தசைநார் சுற்றியுள்ள திரவம் நிரப்பப்பட்ட உறை அழற்சியால்" பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிவித்தார்கள்.இதனை தொடர்ந்து முறையான  சிகிச்சைக்குப்  பின் அவரது கைவிரல்கள் இயல்பான நிலைக்கு திரும்பியது.

 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது நிதர்சனமே.

Tags : #SMARTPHONE #CHINA #CELL PHONE BINGE