
ஆவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் தாயார் இந்திராணி, மனைவி வைஜெயந்திமாலா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். மாமியார்-மருமகள் பிரச்சினை காரணமாக ராஜேந்திரன் அவரது தாயை தனியாகக் குடி வைத்துள்ளார்.
அண்மையில் ராஜேந்திரன் புதிய ஹுண்டாய் காரொன்றை வாங்கி, அதில் தனது மனைவியுடன் சென்றுள்ளார். இதனை பார்த்த இந்திராணி மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதைப் பொறுக்க முடியாமல் காரில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BY MANJULA | FEB 14, 2018 2:24 PM #CAR #CHENNAI #கார் #சென்னை #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories