All
Looks like you've blocked notifications!

டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜிதேந்திர சிங் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் 6 நிறுவனங்களில் இன்சூரன்ஸ் செய்து வைத்திருந்தார்.

 

இதனையறிந்த அவரது மனைவி, கணவன் இறந்து விட்டதாக இறப்புச்சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை சட்டவிரோதமாகப் பெற்று இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் சமர்ப்பித்து ரூ.16 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.

 

இதில் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி ஜிதேந்திர சிங்கின் சான்றிதழ்களில் சந்தேகமடைந்து போலீஸ்க்கு தகவல் தெரிவிக்க, விசாரணையில் போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்து அவரது மனைவி பணம் மோசடி செய்த விவரம் தெரியவந்தது.

 

இதனையடுத்து, இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் மற்றும் ஜிதேந்திர சிங்கின் மனைவி குடும்பத்தார் உட்பட 6 பேரை,  போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BY MANJULA | FEB 10, 2018 2:50 PM #DELHI #INSURANCE #டெல்லி #இன்சூரன்ஸ் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People