‘மாத்திரைக்கு பதில் ஒரு மாத்திரை அட்டையையே விழுங்கிய பெண்மணி’.. அதிர்ச்சி சம்பவம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 18, 2019 10:30 PM
மாத்திரை விழுங்குவது என்றால் எவ்வளவு வயதானாலும் பலருக்கு சிக்கல்தான்.
சிலர் ஒரு மாத்திரையை நான்காக உடைத்துவிட்டு அதை நான்கு முறை விழுங்க வேண்டுமே என்று யோசித்துவிட்டு பயந்துகொள்வதும் உண்டு. எனினும் பலருக்கு மாத்திரைகள் உட்கொண்டதும் சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றால் மாத்திரை தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும் இடர்ப்பாடும் நடந்துவிடும். ஆனால் மாத்திரை அட்டையையே விழுங்கிய பெண்ணின் தொண்டையில் மாத்திரை அட்டை சிக்கியிருப்பது 17 நாட்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் வடக்கு மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம், 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வலி நிவாரண மருந்தினை உட்கொண்டுள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து தொண்டையில் இருந்த ஒவ்வாமை காரணமாக, மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே மூலம் தான் விழுங்கியது மாத்திரை அல்ல. ஒரு முழு மாத்திரை அட்டையையே விழுங்கியுள்ளோம் என்கிற உண்மையை அப்போதுதான் புரிந்துகொண்டுள்ளார்.
எனினும் அந்த மாத்திரை அட்டையினை விழுங்கியது பற்றி தனக்கு எந்த ஐடியாவும் இல்லை என்றும், எப்படி அந்த சம்பவம் நிகழ்ந்ததென்றே தெரியவில்லை என்றும் அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார். மாத்திரை விழுங்கிவிட்டேனா? என்று மறதி காரணமாக பெரியவர்கள் கேட்பதுண்டு. ஆனால் மாத்திரை அட்டையையே விழுங்கியதே தெரியாமல் இருந்துள்ள இந்த பெண்மணியின் நினைவாற்றல் அந்த மருத்துவமனையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.