சேலம் ரயில் கொள்ளை வழக்கு.. நாசாவின் உதவியுடன் 2 ஆண்டுகளுக்கு பின் புதிய திருப்பம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 27, 2018 01:02 PM
With help from NASA, popular theft case finds new light

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் இருந்து  ரூ. 5.78 கோடி ரயில் கொள்ளை விவகாரத்தில் புதிய துப்பு துலங்கியுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறபட்டுள்ளது.

கடந்த வருடம் சென்னையில் இருந்து சேலம் வரும் வழியில் ரயிலின் மூலம் கொண்டுவரப்பட்ட வங்கி பணத்தை, ரயிலின் மேற்கூரையை துளையிட்டு சிலர் கொள்ளையடித்தனர். அந்த நூதன கொள்ளையின்போது பணமதிப்பிழப்பு சட்டமும் கொண்டுவரப்பட்டது.  மேலும் அந்த ரயில் சென்னை எக்மோர் ரயில் நிலையம் வந்த போதுதான், பணம் கொள்ளையடிக்கப்பட்டு அறியப்பட்டது. உடனே காவல் துறையினர் அதற்கான விசாரணையைத் தொடங்கினர். அதன் பின்னர், வழக்கு சிபிசிஐடிக்கு மாற, தற்போது இரண்டு வருடத்துக்கு பிறகு அந்த வழக்கில் திடீர் திருப்பமாக மத்திய பிரதேசம், பிகார் மாநிலங்களை சேர்ந்த 11 பேரை போலீசார் வளைத்து பிடித்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று, கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பாதையின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியிருந்தது.

அதன் உதவியுடனும் முக்கியமான செல் போன் நம்பர்களை கண்டுபிடித்தும் இந்த கொள்ளை சேலம்-விழுப்புரத்துக்கு இடையே நடந்திருக்க வேண்டும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள சிபிசிஐடி மேலும் விசாரணை செய்து வருகிறது.கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் இருந்து  ரூ. 5.78 கோடி ரயில் கொள்ளை விவகாரத்தில் புதிய துப்பு துலங்கியுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறபட்டுள்ளது.

கடந்த வருடம் சென்னையில் இருந்து சேலம் வரும் வழியில் ரயிலின் மூலம் கொண்டுவரப்பட்ட வங்கி பணத்தை, ரயிலின் மேற்கூரையை துளையிட்டு சிலர் கொள்ளையடித்தனர். அந்த நூதன கொள்ளையின்போது பணமதிப்பிழப்பு சட்டமும் கொண்டுவரப்பட்டது.  மேலும் அந்த ரயில் சென்னை எக்மோர் ரயில் நிலையம் வந்த போதுதான், பணம் கொள்ளையடிக்கப்பட்டு அறியப்பட்டது. உடனே காவல் துறையினர் அதற்கான விசாரணையைத் தொடங்கினர். அதன் பின்னர், வழக்கு சிபிசிஐடிக்கு மாற, தற்போது இரண்டு வருடத்துக்கு பிறகு அந்த வழக்கில் திடீர் திருப்பமாக மத்திய பிரதேசம், பிகார் மாநிலங்களை சேர்ந்த 11 பேரை போலீசார் வளைத்து பிடித்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று, கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பாதையின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியிருந்தது.

அதன் உதவியுடனும் முக்கியமான செல் போன் நம்பர்களை கண்டுபிடித்தும் இந்த கொள்ளை சேலம்-விழுப்புரத்துக்கு இடையே நடந்திருக்க வேண்டும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள சிபிசிஐடி மேலும் விசாரணை செய்து வருகிறது.

Tags : #TRAINROBERRY #SELAMCHENNAITRAINROBERRY