2018-ஆம் ஆண்டு இரண்டு முறை நீட் தேர்வா?

Home > News Shots > தமிழ்

By |
Will the NEET Exam be conducted twice in 2018?

மருத்துவ படிப்பு நுழைவுக்கான, மத்திய அரசின் திட்டமான நீட் தேர்வை, வருடத்திற்கு 2 முறை நடத்தலாம் என்று மத்திய மனிதவள அமைச்சகம் முன்னதாக முடிவு செய்திருந்தது.  தற்போது இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாக நீட் தேர்வுத்துறை இயக்குநர் சான்யம் பரத்வாஜ் அறிவித்துள்ளார்.

 

2018ம் ஆண்டை பொருத்தவரை இரண்டு நீட் தேர்வு நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டிருந்தது. மேலும் 2019-ம் ஆண்டு தொடங்கி இனி வரும் காலங்களில், வருடத்துக்கு 2 முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த மாதம் 7-ம் தேதி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

 

அப்போது, ஊடகங்களிடம் பேட்டியளித்த அவர், `இனி வரும் வருடம் முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ நீட் தேர்வை நடத்தப் போவதில்லை என்றும் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளை, ’தேசியத் தேர்வுகள் முகமை’ என்று சொல்லப்படும் National Testing Agency நடத்தும் என்றும் கூறினார்.

 

ஜே.இ.இ முதன்மை தேர்வு, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் என இருமுறையும், நீட் தேர்வு, பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் என இருமுறையும் ஆன்லைன், மற்றும் ஆஃப்லைன் மூலம் நடத்துவதற்கான பேச்சுவார்த்தையை நீட் தேர்வுத்துறையும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் கலந்தாலோசித்து வருகின்றன.

Tags : #NEET