
நிதி நெருக்கடியால் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கிட, ஏர்செல் நிறுவனம் தொடர்ந்து தடுமாறி வந்தது.
இந்தநிலையில், இன்று நள்ளிரவுக்குள் நிலைமை சீர் செய்யப்படும் என ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் ஏர்செல் செல்போன் சேவை 60% சரி செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவுக்குள் நிலைமை முழுவதுமாக சீர் செய்யப்படும். சின்ன, சின்ன தடங்கல்களுக்கு வருந்துகிறோம்," என்றார்.
தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் ஏர்செல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 23, 2018 7:59 PM #AIRCEL #TAMILNADU #ஏர்செல் #தமிழ்நாடு #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories