'விவேகம்' படத்தைத் தொடர்ந்து 4-வது முறையாக மீண்டும் சிறுத்தை சிவா-அஜீத் கூட்டணி இணைந்துள்ளது. 'விசுவாசம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்காக தனது தோற்றத்தை ரசிகர்கள் விரும்பும் வகையில், இளமையாக அஜீத் மாற்றியிருக்கிறார்.
இந்தநிலையில், இப்படத்திலாவது தனது 12 வருட ட்ரெண்டை 'தல' உடைப்பாரா? என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதாவது கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி இதுவரை போலீஸ்-டான் என மாறி,மாறி ஒரே பாணியில் அஜீத் நடித்து வருகிறார். கிரீடம்(போலீஸ்), பில்லா(டான்), ஏகன்(போலீஸ்), அசல்(டான்) என பல்வேறு படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
கடைசியாக, வெளியான 'விவேகம்' படத்தில் அஜீத் போலீசாக நடித்திருந்தார். இதனால் 'விசுவாசம்' படத்தில் தனது ட்ரெண்ட்டைப் பின்பற்றி 'தல' டானாக நடிப்பாரா? இல்லை 12 வருட ட்ரெண்ட்டை உடைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.