வாட்ஸ் ஆப்பைத் திறக்காமலேயே 'விரும்பியவருக்கு' மெசேஜ் அனுப்பும் வசதி!
Home > News Shots > தமிழ்By Manjula | May 07, 2018 07:35 PM
வாட்ஸ் ஆப்பைத் திறக்காமலேயே மெசேஜ் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி அவர்கள் உருவாக்கியுள்ள 'https://wa.me/' என்ற டொமைன்-ஐ பதிவு செய்து அதில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வசதிக்குப் பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் அப்-பை 2.18.138 க்கு மேம்படுத்த வேண்டும். இந்த வசதி ஆண்ட்ராய்டு பீட்டாவில் மட்டும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
பயனர்கள் முதலில் https://wa.me/91 (phone number) என்ற தளத்தில் தாங்கள் மெசேஜ் செய்ய விரும்புவரின் மொபைல் நம்பரை டைப் செய்ய வேண்டும். அதன் பின் URL தானாக வாட்ஸ் அப் பகுதிக்குப் பயனாளர்களைக் கொண்டு செல்லும். அங்கு நீங்கள் நம்பர் பதிவிட்டவருடன் மட்டும் மெசேஜ் செய்யலாம். நீங்கள் பதிவிட்ட நம்பர் தவறானதாக இருந்தால் அதுவே தவறு எனச் சுட்டிக்காட்டி விடும்.
இந்த இடத்தில் உங்களுக்கு சரியான மொபைல் எண் நினைவில் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுதல் அவசியம் ஆகும்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Child pornography-based WhatsApp group busted
- அழகான 'புகைப்படங்களை' வையுங்கள்..'வாட்ஸ்அப்' பார்த்து அதிர்ந்து போன போலீசார்!
- WhatsApp gets two new features: ‘Dismiss as Admin’ and ‘High Priority Notifications’
- WhatsApp helps police nab drug dealer
- Soon you can re-download deleted WhatsApp videos, images