
தகவல் பரிமாற்றத்துக்காக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ் ஆப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் உள்ள செட்டிங்க்ஸ் வசதியைத் தேர்வு செய்தால் அதில் வரும் ஆப்ஷன்களில் ஒன்றாக பணப்பரிமாற்றமும் உள்ளது. இதன் மூலம், பணத்தை அனுப்ப நினைப்பவர்கள் பயன்பெற முடியும்.
முதலில் சோதனைக்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. சோதனைக்குப்பின் இந்த வசதி அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
BY MANJULA | FEB 10, 2018 10:13 AM #WHATSAPP #INDIA #வாட்ஸ்ஆப் #இந்தியா #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories