‘சொன்னா கேக்கனும்.. 15 வருஷமா பாக்குற எங்களுக்கு தெரியாதா எப்படி ட்விஸ்ட் அடிக்கும்னு?’:தமிழ்நாடு வெதர்மேன்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 03, 2018 01:36 PM
நவம்பர் 6-ம் தேதி, அதாவது வரும் தீபாவளி அன்று, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மண்டல ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து, பலருக்கும் இதே சந்தேகம் எழும்பியது. இந்த பரபரப்பான மழைச் சூழ்நிலையில் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் வெதர் ரிப்போர்ட்டை அப்டேட் செய்துள்ளார்.
அதன்படி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, நாைக, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் சிறப்பாக மழை பெய்து இருக்கிறது என்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மலைப்பகுதியிலும், மற்றும் தூத்துக்குடியிலும் கன மழை பெய்யும் என்றும், வடகிழக்குப் பருவமழை துவங்கிய பிறகு தற்போதே முதல் முறையாக, மணிமுத்தாறு அணையில் 200 மி.மீட்டருக்கும் அதிகமாக 286 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி இருப்பதாகவும், இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த சில நாட்களுக்கு ஆங்காங்கே சில இடங்களில் திடீரென லேசான மழை பெய்யும் என்றும் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தீபாவளியன்று வறண்ட வானிலையே இருக்கும்.அடுத்து வரும் நாட்களில் வானிலையில் பெரும்பாலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியவர், கூடுதல் இணைப்பாக, ‘சொன்னா கேக்கனும்.. 15 வருஷமா வானிலை மேப் பாக்குறோம்..எங்களுக்கு தெரியாதா எப்படி டிவிஸ்ட் அடிக்கும்னு’ என்று சேர்த்துள்ளார்.