'எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்றால்'.. பாஜகவை எச்சரித்த குமாரசாமி!
Home > News Shots > தமிழ்By Manjula | May 16, 2018 03:12 PM
நீங்கள் எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் நாங்கள் உங்களிடமிருந்து இரண்டு எம்.எல்.ஏக்களை இழுப்போம் என, பாஜக கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'ஆபரேஷன் கமல்’ வெற்றிகரமாக நடந்ததை மறந்துவிடக்கூடாது. எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் நாங்கள் உங்களிடமிருந்து இரண்டு எம்.எல்.ஏக்களை இழுப்போம். பாஜகவில் இருந்து வெளியேற சில எம்.எல்.ஏக்கள் தயாராக உள்ளனர். பாஜக குதிரை பேரம் பேசினால் எங்கள் எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைப்போம்,'' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 'ஆபரேஷன் லோட்டஸ்' என்ற பெயரில் தேர்தலில் வென்ற பிறகட்சி எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலைக் கொண்டுவர பாஜக முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.