'அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள்'.. ஹார்லி டேவிட்சனிடம் கெஞ்சும் டிரம்ப்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 28, 2018 06:44 PM
இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிக்கும் விவகாரத்தில் இந்தியா, சீனா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும் சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரியை விதித்தது.
இதற்கு பதிலடியாக சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தின. இதனால் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் தற்போது அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தகப்போரால் பாதிப்புக்குள்ளான ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது தொழிற்சாலைகளை அமெரிக்காவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்ததுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அமெரிக்காவில் தான் 100 சதவீதம் செயல்பட வேண்டும். அமெரிக்கா மீது ஐரோப்பிய நாடுகள் விதிக்கும் கூடுதல் வரிக்கு பயந்து இந்த நாட்டை விட்டு வெளியே ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முடிவெடுக்க கூடாது. உங்களுக்காக நாங்கள் நிறைய செய்துள்ளோம். உங்களுக்கு ஆதரவு தந்த மக்களை மறந்து விடாதீர்கள். உங்களை நாங்கள் மறக்க மாட்டோம்,'' என கேட்டுக்கொண்டுள்ளார்.