பிரச்சினைகளை காங்கிரஸ் உடன் 'இணைந்து' எதிர்கொள்வோம்: குமாரசாமி
Home > News Shots > தமிழ்By Manjula | May 17, 2018 01:02 PM
புகைப்பட உதவி @ANI
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அதிகபட்சமாக 104 எம்.எல்.ஏ-க்களைப் பெற்ற பா.ஜ.க-வை ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் 23-வது முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
இதனை எதிர்த்து சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்களும் சட்டசபை எதிரில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்துக்கு இடையில் குமாரசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளைப் பயன்படுத்தி எம்.எல்.ஏக்களை மிரட்டுவது பாஜகவின் வாடிக்கை.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது.காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது. பிரச்சினைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம்,'' என்றார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Karnataka: Congress, JD(S) threaten to stage dharna in front of Raj Bhavan
- பெயரை அழைத்தால் 'ஜெய்ஹிந்த்' சொல்ல வேண்டும்.. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உத்தரவு!
- Another ‘Koovathur’ in Karnataka, Congress MLAs taken to resort
- 'எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்றால்'.. பாஜகவை எச்சரித்த குமாரசாமி!
- 'ரூபாய் 100 கோடி தருவதாக ஆசை காட்டுகின்றனர்'.. குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு!
- Here is what happened during Cauvery water row hearing at SC
- “BJP offered us Rs 100 crore”: Stunning twist in Karnataka election
- Karnataka assembly election: BJP candidate stakes claim to become CM
- கர்நாடகா தேர்தல்: குமாரசாமியின் 'திட்டவட்ட' முடிவால் பாஜக அதிர்ச்சி!
- காங்கிரஸ் 'எம்எல்ஏ'-க்கள் தலைமறைவு?.. சித்தராமையா விளக்கம்!