'ஹர்திக் பாண்டியாவை இனி ஆல்ரவுண்டர் என கூப்பிடாதீர்கள்'.. பிரபல வீரர் காட்டம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Aug 16, 2018 02:41 PM
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை இனி ஆல்ரவுண்டர் என கூப்பிட வேண்டாம் என, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
குறிப்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும் என்றும் அவருக்குப் பதிலாக ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் எனவும், ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என, ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''பாண்டியா பேட்ஸ்மேனாக அதிகம் ரன்கள் குவிக்கவில்லை. அவர்மீது கேப்டனுக்கும் நம்பிக்கை இருப்பது போல தெரியவில்லை.முதல் டெஸ்டில் ஸ்டோக்ஸ்,கர்ரன் சிறப்பாக பேட்டிங்,பந்துவீச்சில் செயல்பட்டனர்.2-வது டெஸ்டில் வோக்ஸ் சிறப்பான ஆல்ரவுண்டராக செயல்பட்டார்.
அதேபோல நாம் பாண்டியாவிடம் எதிர்பார்த்தோம். ஆனால் அவரால் ஓவர்நைட்டில் கபில்தேவ் ஆக முடியவில்லை. எனவே நாம் அவரை ஆல்ரவுண்டர் என அழைப்பதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.
மொத்தம் 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா 90 ரன்களை எடுத்து, 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.