கர்நாடகா தேர்தல்: குமாரசாமியின் 'திட்டவட்ட' முடிவால் பாஜக அதிர்ச்சி!
Home > News Shots > தமிழ்By Manjula | May 16, 2018 12:31 PM
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 104 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று காலை பெங்களூர் நகரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க எச்டி குமாரசாமி வந்தார்.
அப்போது அவரிடம் பாஜகவினர் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துவிட்டோம். இந்த சூழலில் வேறு யாருடனும், பேச்சு நடத்த நாங்கள் தயாராக இல்லை.
காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முடிவில்தான் இன்று எம்எல்ஏ-க்கள் கூட்டத்தையும் கூட்டி இருக்கிறோம். ஆதலால், இதைத் தவிர்த்து வேறு எந்த முடிவும் நாங்கள் எடுக்கப்போவதில்லை,'' என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.