நாங்கள் கோலியை நம்பியிருக்க விரும்பவில்லை! கூறிய இந்திய வேகபந்து வீச்சாளர்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 01, 2019 11:46 AM

எல்லா நேரங்களிலும் கேப்டன் விராட் கோலியை நம்பியிருக்க விரும்பவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

we don\'t want to depend on kohli always,Says indian bowler

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய அணி இதுவரை நடந்து முடிந்த 4 ஒருநாள் போட்டியில் 3-1 என்கிற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நடந்து முடிந்த முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அபாரமான வெற்றியைப் பெற்ற இந்திய அணி 4 -ஆவது ஒருநாள் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது.

முன்னதாக நேற்று நடைபெற்ற நியூஸிலாந்திற்கு எதிரான  4 -ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பௌலிங்கை தேர்வு செய்த நியூஸிலாந்து அணி ஆரம்பம் முதலே தங்களது சிறப்பான பந்துவீச்சால் இந்திய வீரர்களை திணறடித்தது. இதனால் தொடக்க ஆட்டகாரர்களான ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இப்போட்டியிலிருந்து கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்ததால் ரோகித் ஷர்மா  கேப்டனாகப் பொறுப்பேற்றிருந்தார். மேலும் இப்போட்டி ரோகித் ஷர்மாவின் 200 -ஆவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆவுட்டாக 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 93 ரன்களை அடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்குக் காரணம் தோனி,கோலி போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததுதான் என சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், போட்டிக்கு பின்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், போட்டி குறித்து பேசுகையில், ‘கோலி ஒரு சிறந்த ப்ளேயர்,  நீங்க அவர மிஸ் பண்ணிருப்பீங்க, ஆனாலும் அவரது இடத்தில் விளையாட  இளம் வீரருக்கு அதுவொரு சிறந்த வாய்ப்பாக இருந்தது. மேலும்,கோலியை மட்டுமே நாங்கள் நம்பியிருக்க விரும்பவில்லை’ என புவனேஷ்வர் குமார் பேசியுள்ளார்.

Tags : #NZVIND #ODI #TEAMINDIA #BHUBANESWAR #VIRATKOHLI