'பணமளித்து வேதனைப்படுத்தாதீர்கள்'.. நெகிழச்செய்த ரியல் ஹீரோக்கள்!
Home > News Shots > தமிழ்By Manjula | Aug 20, 2018 10:28 PM
ராணுவம் மற்றும் இதர மீட்புப்படையினருடன் கைகோர்த்து, மீனவர்களும் வெள்ளத்தில் தவிக்கும் மக்களைக் காப்பாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், ''மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ஒவ்வொரு மீனவரின் பணியும் மகத்தானது. நமது மாநிலத்தின் ராணுவத்தினராக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 3 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் அவர்களின் படகுகள் சேதமடைந்து இருந்தால் அதனை அரசே சரிசெய்து தரும்,'' என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தங்களுக்கு உதவித்தொகை வேண்டாம் என மீனவர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''முதல்வர் எங்கள் பணிகளைப் பாராட்டிப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.எங்கள் சகோதர - சகோதரிகளுக்குத்தான் உதவி செய்தோம்.மக்களின் உயிரைக்காக்கும் பணிக்கு பணம் வேண்டாம்,'' என தெரிவித்துள்ளனர்.
மீனவர்களின் இந்த செயல் கேரள முதல்வர் தொடங்கி, அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.