கடந்த வாரம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் மூலம் காஷ்மீர் இளைஞர் ஒருவர் புகழ் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். அவர் குறித்த தகவல்களை கீழே பார்ப்போம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோனாவரி கிராமத்தை சேர்ந்தவர் மன்சூர் தார். 24 வயதான மன்சூர் உள்ளூர் கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம், நடப்பு ஐ.பி.எல் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போயிருக்கிறார். பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணிக்காக விளையாடவிருக்கும் மன்சூர் இதுகுறித்து கூறுகையில் "இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த இறைவன் மற்றும் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா ஆகியோருக்கு நன்றி.
ஒருகாலத்தில் தினசரி 60 ரூபாய் கூலி வேலைக்கு சென்றேன். 2008 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், இரவு நேர காவலாளியாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன்.
பல்வேறு சிரமங்களுக்குப் பின், தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
யுவராஜ்சிங் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவருடன் இணைந்து விளையாடவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோனி போன்று சிக்சர் அடிக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.