‘ஐடி கார்டு இல்லயா? அப்படி நில்லுங்க’.. பிரபல வீரரை நிறுத்திய செக்யூரிட்டி..வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 21, 2019 10:52 AM
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்துகொள்ள வந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரிடம் அடையாள அட்டை இல்லாததால் அவரை பாதுகாப்பு காவலர் ஒருவர் நிறுத்தி வைத்துள்ள சம்பவம் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக வந்திருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது லாக்கர் அறைக்குச் சென்றபோது, அவரிடம் அங்கிருந்த செக்யூரிட்டி போலீஸ் ஒருவர் தன்னுடைய அடையாள அட்டையை தூக்கி காண்பித்து ‘உங்கள் அடையாள அட்டையை காண்பித்துவிட்டு செல்லுங்கள்’ என்று கேட்டுள்ளார்.
ஊழியர்கள், வீரர்கள், பெரிய அதிகாரிகள், பிரபலங்கள் என்று பாராமல் யாராக இருந்தாலும் சரி, ஐடி கார்டு இருந்தால்தான் லாக்கர் அறைக்குள்ளே அனுமதிக்க முடியும் என்று பாதுகாப்பு காவலர் அத்தனை சின்சியராக வேலை பார்த்ததை பெடரர் விரும்பியுள்ளார் போல. அதனால்தான் என்னவோ எவ்வித கர்வமும் இன்றின் அடக்கத்துடன், செக்யூரிட்டியின் சொல்பேச்சு கேட்டு அவருக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் நகர்ந்து நின்றுவிட்டார்.
அதன் பின்னர் பெடரரின் அணியில் இருந்து ஒருவர் ஐடி கார்டினை எடுத்துக்கொண்டு வேகமாக வந்துள்ளார். வந்தவர் தனது ஐடி கார்டினை காட்டி, பெடரரும் தன் அணிதான் என்று மறைமுகமாகச் சொல்ல பெடரர் நடந்து சென்றுள்ளார். அதை பார்த்த பிறகே செக்யூரிட்டி பெடரரை, ‘உள்ளே போகலாம்’ என்று புன்னகையுடன் அனுமதித்தார். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது.
அதன் பின்னர் பெடரர் மெல்போர்ன் பார்க்கில் கோலியுடன் சந்தித்து பேசினார். பெடரர், கோலி, கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து அந்த புகைப்படமும் வைரலாகியது.
Even @rogerfederer needs his accreditation 😂#AusOpen (via @Eurosport_UK)
— #AusOpen (@AustralianOpen) January 19, 2019
pic.twitter.com/oZETUaygSE