‘சாப்பாடுதான் முக்கியம்.. அப்புறம் பசிக்கும்ல?’.. அழுதுகொண்டே சிறுவன் சொல்லும் வைரல் பதில்.. வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 31, 2018 11:09 AM
சமீப காலமாகவே குழந்தைகள் செய்யும் சேட்டைகள், அவர்களின் எதார்த்தமான பேச்சுகள் உள்ளிட்டவை இணையத்தில் வைரலாகி வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக அவர்கள் அழுகிற வீடியோக்கள். மிகவும் எதார்த்தமான ஒரு விஷயத்திற்காக அவர்கள் சண்டையிடவோ அழவோ செய்யும் காட்சிகளில் அந்த குழந்தைகளின் உண்மையான மற்றும் சுத்தமான உள்ளம் தெரியவரும். அதனாலேயே இந்த வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகின.
அவ்வகையில் ‘குணமா வாயால சொல்லனும்’, ‘பயந்துட்டேன்’, ‘அப்பாகிட்ட நாந்தான் சொல்லுவேன்’, ஆகிய வைரல் குட்டீஸ்களின் வீடியோ வரிசையில் புதுவரவாக வந்துள்ளது, ‘எனக்கு சாப்பாடுதான் முக்கியம்’ என்கிற சிறுவனின் வீடியோ.
வீடியோ எடுப்பவர் அந்த மழலைச் சிறுவனிடம், ‘இளைஞரணி சங்கத்துல நீ சேந்துட்ட.. போய் உங்கம்மா கிட்ட சங்கத்துக்கு 2000 ரூபாய் வாங்கிட்டு வா’ என்று மதுரை மொழியில் கேட்கிறார். சிறுவனோ மிகவும் சோகமாக திரும்பி நடக்கிறான். ஆனால் அவனிடம் மீண்டும், வீடியோ எடுப்பவர், ‘என்ன போய்ட்டு திரும்பி வருவியா?’ என கேட்க, சிறுவன், ‘சாப்ட்டு வரேன்’ என்கிறான்.
உடனே அனைவரும் சிரிக்கின்றனர். மீண்டும் அவர் கேட்கிறார், ‘சங்கத்துல உறுப்பினர் நீ.. சாப்ட்டு வரேங்குற? சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா?’ என்று கேட்கிறார். உடனே யோசிக்காமல், சிறுவனிடம் இருந்து ‘சாப்பாடுதான் முக்கியம்’ என பதில் வருகிறது. அனைவரும் ஆச்சரியமாகி சிரிக்கின்றனர். மீண்டும் கேட்க, சிறுவன், ‘சாப்பாடுதான் முக்கியம்.. அப்புறம் பசிக்கும்ல சாப்டு வராம?’ என்று சொல்லிக்கொண்டே அழத் தொடங்குகிறான். இந்த வீடியோ இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது.
உனக்கு சங்கம் முக்கியமா.? சாப்பாடு முக்கியமா.?
— சிறுதுளி (@itntweets) December 30, 2018
சாப்பாடுதான் முக்கியம் 😂😂😂👏🏼#என்_இனமடா_நீ #நமக்கு_சோறுதான்_முக்கியம் pic.twitter.com/F5BFduMn7p