‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Feb 03, 2019 12:32 PM
பிரேசில் நாட்டில் அணை உடைந்து இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் புருமாடின்கோ என்னும் நகரத்திலுள்ள பயன்பாட்டில் இல்லாத அணை கடந்த 25 -ஆம் தேதி திடீரென உடைந்தது. அணைக்கு அருகே இருந்த சுரங்கத்தில் தொழிளாலர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். மேலும் அணையின் அருகே ஒரு உணவகமும் இருந்துள்ளது. இன்னும் ஏராளமான மக்கள் அணைக்கு அருகே இருந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் அணையிலிருந்து வெளியேறிய நீர் சேற்றுடன் வேகமாக வந்துள்ளது. இதனை அறியாமல் மக்கள் தங்களது வேலைகளில் மும்முரமாக இருந்துள்ளனர். இதனையடுத்து அணையிலிருந்து வேகமாக வந்த நீர் சுரங்கம் மற்றும் அங்கிருந்த குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. உடனே தகவல் அறிந்து பிரேசில் நாட்டு தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் வேகமாக மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.
ஆனால் விபத்தில் இதுவரை 115 உயிரிழந்திருப்பதாகவும் 248 பேர் காணாமல் போயிருப்பதாகவும் பிரேசில் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சேற்றில் அதிகமானோர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளன.
தற்போது விபத்து தொடர்பாக சுரங்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் அணையிலிருந்து வெளியேறிய நீர் சேற்றுடன் வருவது போலவும், அதற்கு அருகே மக்கள் கார்களில் சென்றுகொண்டிருப்பது போலவும் இருக்கிறது. இதனால் மீட்பு பணிகள் தாமதமாக இருப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.