7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: கோலி-யின் புதிய சாதனை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 28, 2019 03:04 PM
நியூஸிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா பிடித்துள்ள மரண மாஸான கேட்ச் வைரலாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, இரு அணிகளும் மோதிக்கொள்ளும் 3-வது ஒரு நாள் போட்டி தொடங்கியது.
இதில் முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய நியூஸிலாந்து அணி 49 ஓவர்களுக்கு 243 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 93 ரன்கள் எடுத்திருந்த ராஸ் டெய்லரின் ரன் ரேட் அணியின் ஸ்கோருக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டதோடு, ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டார். முன்னதாக கரண் ஜோகர் நடத்திய காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கிரிக்கெட் வீரர்கள் சிலரை ஒப்பிட்டு பேசியதற்கும் கிரிக்கெட் வாரியத்தின் கண்டனத்தை எதிர்கொண்டதோடு, பிசிசிஐ-யின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகினார்.
தொடர்ந்து, பல விவாதங்களுக்கு பிறகு பாண்ட்யாவை தற்போதைய அணியில் சேர்த்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய இந்த 3-வது ஒருநாள் போட்டியில் பாண்ட்யா விளையாடினார். 2 விக்கெட்டுகள் இழப்புக்கு நியூஸிலாந்து 59 ரன்கள் எடுத்திருந்த சமயத்தில், 17-வது ஓவரின் முதல் பந்தை சாஹல் வீசினார். அந்த பந்தை நிதானமாக எதிர்கொண்ட கேன் வில்லியம்சன், அதே ஓவரின் 2-வது பந்தை சாஹல் வீசும்போது தூக்கி அடித்துள்ளார்.
அப்போது பறந்து வந்த பந்தை, ஃபீல்டிங்கில் நின்றுகொண்டிருந்த ஹர்திக் பாண்ட்யா காற்றில் கிடைமட்டமாக பறந்து, கேட்ச் பிடித்து, மிக முக்கியமான விக்கெட்டான கேன் வில்லியம்சனின் விக்கெட்டைக் கைப்பற்றினார். அவரது இந்த கேட்சினை பலரும் சூப்பர் மேன் கேட்ச் என்று புகழ்ந்தும் இணையத்தில் பாராட்டியும் வருவதோடு, அவர் கேட்ச் பிடித்த அந்த வீடியோ வைரலாகி வருகிறது. தன் மீதுள்ள கறைகள் நீங்கும்படியாக இந்த ஒரே கேட்சில் அனைவரையும் ஹர்திக் வசப்படுத்தியுள்ளதாக இணையத்தில் ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர்.
அதன் பிறகு 244 ரன்கள் என்கிற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி, 43 ஓவர்களின் முடிவில் 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மொத்த தொடரையும் 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் 60 ரன்கள் எடுத்த கோலி தனது 49வது அரை சதத்தை எடுத்து சாதனை புரிந்துள்ளார். அடுத்து இரு அணிகளும் மோதவுள்ள 4வது ஒருநாள் போட்டி வரும் வியாழன் அன்று காலையில் நடக்கவுள்ளது.
#teamindia #HardikPandya
— shankar more (@We_Indians_) January 28, 2019
Awesome catch ... pic.twitter.com/41Ap3cQLJP