'தரையிலயே படாமல் தரமான சம்பவம்'.. சர்ச்சையை கிளப்பிய கேட்ச்..வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 22, 2019 02:00 PM
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ப்ரண்டெம் மெக்குலத்தின் கேட்ச் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் எனும் 2 அணிகளுக்கு இடையே நிகழ்ந்த இந்த கிரிக்கெட் போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி தோல்வியுற்றது. ஆனாலும் ப்ரண்டெம் மெக்குலத்தின் ஒரு குறிப்பிட்ட கேட்ச் வைரலானதோடு பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிரிக்கெட் உலகத்துக்குள் உருவாக்கியுள்ளது.
முன்னதாக சிட்னி சிக்ஸர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது 16-வது ஓவரில் ஜேம்ஸ் வின்ஸ் அடித்த பந்து சிக்ஸரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த சமயத்தில் பந்தைத் தடுத்த மெக்குல்லம் தன் முயற்சியில் தோல்வியுற்று, முதலில் பவுண்டரி லைனுக்கு அருகே விழுந்தார். ஆனால் இன்னும் பந்து கீழே விழாமல் பவுண்டரியைத் தாண்டிச் செல்வதைப் பார்த்த மெக்குல்லம் உந்திப் பறந்து, கை, கால்கள் எதுவும் தரையில் படாத நிலையில் தன் கையால் பந்தை பவுண்டரிக்குள் தட்டிவிட்டுள்ளார்.
இதனை மீண்டும் ரீ-பிளேயில் பார்த்த அம்பயர்கள் ‘இது சிக்ஸர் இல்லை’ என்கிற அறிவிப்பைக் கொடுத்தனர். இதனையடுத்து மெக்குல்லத்தின் இந்த அமேசிங் கேட்ச் அனைவராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. ஆனாலும் மெக்குல்லம் செய்த செயல் சரியா? தவறா? என்று சில ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
No catch but how did Brendon McCullum stop this from going for a boundary!?#BBL08 | @BKTtires pic.twitter.com/BZagW88nQ7
— cricket.com.au (@cricketcomau) January 20, 2019