டைவ் அடித்து கேட்ச் பிடித்த இந்திய வீரர்.. வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Feb 06, 2019 06:08 PM
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நியூஸிலாந்து - இந்தியா இடையேயான முதல் டி20 போட்டி நெஸ்ட்பேக் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்யத் தொடங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய பௌலர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்ய தொடங்கினர்.
மேலும் நியூஸிலாந்து அணியின் அறிமுக வீரரான டிம் செயிஃபெர்ட் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 43 பந்துகளில் 84 ரன்களை அடித்தார். அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி வீரர்கள் தங்கள் பங்கிற்கு சிக்ஸர்களை அடித்து விளாசினர். 20 ஓவரின் முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஆனாலும் நிதானமான ஆட்டதை வெளிப்படுத்தி கொண்டிருந்த தவானும் 29 ரன்களில் தன்னுடைய விக்கெட்டை பெர்குசன் பந்துவீச்சில் பறிகொடுத்தார். இதனையடுத்து தமிழக வீரரான விஜய் சங்கர் 27 ரன்களிலும் ரிஷப் பண்ட் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் பின்னர் இறங்கிய தோனி மற்றும் க்ருணால் பாண்ட்யாவின் கூட்டணி 50 ரன்களை எடுத்தது. தோனி 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். இந்நிலையில் 19.2 ஓவர்களில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
முன்னதாக ஹர்திக் பாண்ட்யா வீசிய 15 ஓவரின் கடைசி பந்தை நியூஸிலாந்து வீரர் மிட்செல் எதிர்கொண்டு தூக்கி அடித்தார். அப்போது பந்து எல்லைக் கோட்டை நெருங்கிச் சென்றது. அதை இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் பாய்ந்து பிடித்து நியூஸிலாந்து வீரர் மிட்செலை அவுட் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
What A Catch!. 🔥 DK (Dinesh Karthik) @DineshKarthik 😍😘 #NZvIND pic.twitter.com/sF5YFCfjHi
— Brijesh sukla (@SuklaBrijesh) February 6, 2019