
பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளினி அஞ்சனா, நடிகர் கயல் சந்திரன் இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு இருவீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதை அஞ்சனா உறுதி செய்தார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் அஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதனை அவர் கணவர் சந்திரன் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்-சேயும் நலமுடன் உள்ளனர். வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி,'' என தெரிவித்துள்ளார். இன்று காலை மருத்துவமனையில் இருந்து அஞ்சனா தனது குழந்தையுடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அஞ்சனா-சந்திரன் இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில், தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



OTHER NEWS SHOTS
