'பாக்கத்தானே போறீங்க,இவரோட ஆட்டத்த'...இவரே இப்படி சொல்லிட்டாரு...அதிர்ச்சியில் ஆஸி வீரர்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 20, 2019 09:51 AM

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய அணி,2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளது.உலககோப்பைக்கு முன்பாக நடைபெற இருக்கும் இந்த போட்டிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இதனால் இந்த போட்டிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Virat Kohli, Rohit Sharma hold edge over Australia bowlers

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி,ஆஸ்திரேலிய அணியை அலறவிட காத்திருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹேடனின் இந்த கருத்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் ஆஸ்திரேலியவில் சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனையை படைத்தது.இது இந்திய அணிக்கு மிகப்பெரிய தெம்பாக அமையும் என ஹேடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹேடன் ''இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.அதற்காக ஆஸ்திரேலிய அணி நிச்சயம் புதிய வியூகங்களை வகுத்தாக வேண்டும்.கோலியின் பலம் அறிந்து பௌலர்கள் பந்து வீச வேண்டும்.இல்லையென்றால் அவர் நிச்சயம் ஆஸ்திரேலிய பௌலர்களை அலறவிட போவது நிச்சயம்'' என தெரிவித்துள்ளார்.

Tags : #VIRATKOHLI #BCCI #CRICKET #MATTHEW HAYDEN #INDIA VS AUSTRALIA #ROHIT SHARMA