115 பிளாஸ்டிக் கப்கள் உட்பட 6 கிலோ எடையுள்ள 1000 பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கிய திமிங்கலம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 21, 2018 08:30 AM
இந்தோனேசியாவின் ஜகார்தா எனும் இடத்தின் அருகே உள்ள கபோடா தீவுப்பகுதியின் பிரபல பூங்காவில் கரையொதுங்கிய 31 அடியுள்ள நீளத் திமிங்கலத்தின் உடலில் 115 பிளாஸ்டிக் கப்’கள் உட்பட ஏறத்தாழ் 6 கிலோ எடையுள்ள குப்பைப் பொருட்கள் இருந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து கூறும் அந்த தேசிய பூங்கா நிர்வாகம், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைப் பொருட்கள், மக்கிய மக்காத குப்பைகள் என 1000த்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இறந்து போன நீள திமிங்கலத்தின் உடலில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.
முன்னதாக 80 பிளாஸ்டிக்குகளை விழுங்கிய திமிங்கலம் இதே தீவில் கரையொதுங்கியது. எனினும் அதைவிடவும் இந்த திமிங்கலத்தின் எடையும் நீளமும் அதிகம் என்பதால் பரவலான கவனத்தை பெற்றுள்ளது.
Tags : #BUZZ #VIRAL #WHALE #INDONESIA #PLASTIC WASTE #JAKARTA #MERINE #WORLD