வயலினுடன் அடக்கம் செய்யப்பட்ட இசையமைப்பாளர்:இசை குடும்பம் உங்களை இழந்துவிட்டது...ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 04, 2018 10:31 AM
கேரளத் திரையுலகினரை கடும் அதிர்ச்சிக்கு ஆழ்த்திய சம்பவம் இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் அகால மரணம்.சாலை விபத்தில் அவரும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினியும் மரணமடைந்தனர்.இந்நிலையில் அவரின் நினைவாக வரையப்பட்டுள்ள கார்ட்டூன்கள் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலின் கலைஞருமான பாலபாஸ்கர். இவர், கடந்த மாதம் 25-ம் தேதி, திருச்சூர் வடக்குநாதர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு தன் குடும்பத்தினருடன் காரில் அதிகாலை 4:30 மணிக்கு வீடுதிரும்பும்போது, பள்ளிப்புரம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்கள்.
இந்த கோர விபத்தில் பாலபாஸ்கருக்கு பலத்த அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேலும் அந்த விபத்தின்போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலபாஸ்கரின் இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மறைந்த பலபாஸ்கரின் இறுதிச்சடங்கு நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.கேரள முதல்வர் பினராயி விஜயன், நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் மலையாள திரையுலகினர், மற்ற மாநில இசைக் கலைஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் வந்து பாலபாஸ்கரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
அவரை அடக்கம் செய்யும் போது அவருக்கு மிகவும் பிடித்த வயலினும் அவருடன் சேர்த்து புதைக்கப்பட்டது.இது அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது.மேலும் அவரின் நினைவாக வரையப்பட்டுள்ள கார்ட்டூன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த கார்ட்டூன்கள் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
Rest in peace @iambalabhaskar …The music family will miss you
— A.R.Rahman (@arrahman) October 2, 2018