விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டாரா அவரது தந்தை..? பதவி விலக கோரும் எதிர்க்கட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Behindwoods News Bureau | Sep 01, 2018 03:37 PM
Vijaya Baskar must resign immediately, Opposition Parties

அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்ட அவரது தந்தை!

கடந்த வருடம் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அச்சமயம் ஆர்.கே.நகர் தேர்தலுக்காக்  ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

 

விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் ரூ 20 லட்சம் பணமும்,  புதுக்கோட்டையில் அவருக்கு சொந்தமான கல் குவாரியிலிருந்து ஆயிரம் மடங்கு அதிகமாக கற்களும், செவிலியர் கல்லூரிகள், பாரா மெடிக்கல் கல்லூரிகள் தொடங்குவதற்காக பெறப்பட்ட கோடிக்கணக்கிலான லஞ்சப்பணமும், சத்துணவுத்து திட்டத்தின் கீழ் அரசு பணிக்கான நேர்முகத்தேர்வு கடிதம், செவிலியர் இடமாற்றத்திற்கான லஞ்சப் பணம், மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.  அதோடு விஜயபாஸ்கரின் உதவியாளர் சீனுவாசனிடம் இருந்தும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதை அடுத்து விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை செயலாளருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித்துறை பரிந்துரைத்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை மறுத்துள்ள நிலையில்,   வருமானவரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் நடத்திய விசாரணையில் அரசு பணி பெற்றுதருவதாகவும், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றுத்தருவதாகவும் பலரிடம் விஜயபாஸ்கர் பலரிடம் லஞ்சம் பெற்றார் என்பதை அவரது தந்தை ஒப்புக்கொண்டதாக முதலில் வருமான வரித்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டது. பின்னர் விஜய பாஸ்கரின் தந்தை இதனை மறுத்துள்ளதாகவும், தான் அவ்வாறு எந்த வாக்குமூலமும் கூறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

எனினும் அவர் பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி, அதிமுகவுக்கு நெருக்கடியை உண்டாக்கி வருகின்றன. 

Tags : #AIADMK #VIJAYABASKAR #TNHEALTHMINISTER #TAMILNADU #MINISTERVIJAYABASKAR #ITRAID