சாதி கொடுமையால் தாயின் சடலத்தை சைக்கிளில் வைத்து 5 கி.மீ தள்ளிச்சென்ற மகன்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 17, 2019 09:33 PM
ஒடிசாவில் சாதிக்கொடுமை காரணமாக பெற்ற தாயினை 5 கி.மீ சைக்கிளில் தனி ஆளாகக் கொண்டு சென்று மகன் ஒருவர் அடக்கம் செய்துள்ள சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது.
ஒடிசாவின் சுண்டர்கர் மாவட்டத்தின் கர்பாபகல் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதான சரோஜ். அவருக்கு சகோதரி ஒருவர் இருக்கிறார். இவரது தாய் ஜானகி சின்ஹானியா நேற்று முன்தினம் தண்ணீர் எடுத்துவரச் சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதை கேட்டு பதறிப்போனார் சரோஜ். பின்னர் தன் தாயினை இறுதியடக்கம் செய்துவிட்டு சடங்குகள் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் சரோஜ் தாழ்த்தப்பட்ட சாதி வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணி யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வராததால் மனம் உடைந்துபோன சரோஜ் தனது தாயின் சடலத்தை சைக்கிளில் வைத்து 5 கி.மீ தள்ளிக்கொண்டு சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளார்.
இதற்கென சைக்கிளில் பாடை போன்ற மூங்கில் பட்டைக்கம்புகளை பொருத்தி, அதன் மீது தன் அம்மாவின் பூத உடலை வைத்துவிட்டு, துக்கத்தில் தன் தலையில் துண்டை போட்டுக்கொண்டு தள்ளிக்கொண்டே நடந்துள்ளார். வழியில் இதை பற்றி விசாரித்தவர்களிடம் தனது அம்மாவின் சடலம் என்று சரோஜ் அளித்த பதிலால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் கடைசி வரை யாருடைய உதவியும் இன்றி சரோஜ் அடக்கம் செய்துள்ளார். சாதியின் பேரால் மனிதர்களை தள்ளிவைத்து இழிவுபடுத்தப்பட்டதால் விளைந்த இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.