'மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் சென்னைவாசிகள்'.. காரணம் இதுதான்!
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 04, 2018 02:05 PM

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரி முதன்மை வகிக்கிறது.அதன் முழு கொள்ளளவு 47.5 அடியாகும்.அது தற்போது 44 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணையில் அதிகமான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தற்போது ஏரிக்கு 1700 கன அடி என்றளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது.இதனால் விரைவில் அதன் முழு கொள்ளளவையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் முதன்மையானதாகத் திகழும் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவது, சென்னை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில்திளைக்க செய்துள்ளது.
Tags : #VADACHENNAI #VEERANAM LAKE
