
நடிகர் கோவை தேசிங்கு மாரடைப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். ராதிகாவின் 'வாணி ராணி' சீரியல் மற்றும் சூர்யாவின் 'சிங்கம்-2' படத்தில் தேசிங்கு ராஜா நடித்திருந்தார்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து சபரிமலைக்கு சென்றபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.
இதைத் தொடர்ந்து, கோவை பல்லடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டு அங்குள்ள மயானம் ஒன்றில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
BY MANJULA | FEB 19, 2018 11:04 AM #VANIRANI #DEATH #வாணிராணி #நடிகர் #மரணம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories