'3 மாசத்துக்கு யாரும் கல்யாணம் பண்ணக்கூடாது'.. முதல்வரின் உத்தரவால் அதிர்ச்சி

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 02, 2018 08:40 PM
Uttar Pradesh government bans all marriages in Allahabad

3 மாதங்களுக்கு திருமணங்கள் எதுவும் நடத்தக்கூடாது என, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மொத்தம் 3 மாதங்கள் கும்பமேளா நடைபெறுகிறது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு புனித நீராடுவர்.

 

குறிப்பாக, அங்கு முக்கிய நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து தங்கிச் செல்வதற்காக, திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள், அலகாபாத்தில் திருமணம் நடத்த தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

 

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அனைத்தும் திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஹோட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : #UTTARPRADESH #MARRIAGE