உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆன #FACEBOOKDOWN ஹேஷ்டேக்: பின்னணி என்ன?
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 21, 2018 11:14 AM
உலகம் முழுவதும் 2.2 பில்லியன் மக்களை பயனாளர்களாகக் கொண்ட பெரும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் இயங்குதளம்தான் பிற்காலத்தில், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் சேவையையும் தானே கைப்பற்றி வழங்கத் தொடங்கியது.
பேஸ்புக்கின் பயனாளர்கள் போலவே, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் பயனாளிகள் அனைவருமே பேஸ்புக்கின் பயனாளர்களாக மாற்றிய பங்கு பேஸ்புக்கைச் சாரும். எனினும், பேஸ்புக் சமீபத்திய காலமாக தனிமனித விபரங்களை கண்காணித்ததாக தகவல் வந்ததை அடுத்து மன்னிப்பு கோரியதுமுண்டு.
இந்த நிலையில் நேற்றைய தினம் (இந்திய நேரப்படி) இரவில் வட அமெரிக்கா, ஐரோப்பியா மற்று ஆசியாவின் பல இடங்களில் பேஸ்புக் முடங்கியதால் பெருத்த சலசலப்பு ஏற்பட்டது. இதனால் #FacebookDown என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது. ஆனால் இதற்கு எவ்வித விளக்கமும் கூறாத பேஸ்புக், இதனை சரிசெய்ய உடனடியாக மேலும் ஒரு கன்சல்டன்சியை அமர்த்தி, பயனாளர் தகவல் முறைக்கேடுகள் மற்றும் வலைதளத்தின் இணைய சிக்கல் உள்ளிட்டவற்றை தீர்க்கக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.