'சிங்கிள் செல்பியால்'.. 99 வருட சிறைத்தண்டனையில் இருந்து தப்பிய இளைஞர்!
Home > News Shots > தமிழ்By Manjula | Nov 21, 2018 08:50 PM
ஒரேயொரு செல்பியால் இளைஞர் ஒருவர் 99 ஆண்டு சிறைத்தண்டனையில் இருந்து தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.
பொதுவாக செல்பியால் பல விபரீதங்கள் நிகழ்வதுண்டு. ஆனால் முதன்முறையாக சிங்கிள் செல்பியால் இளைஞர் சிறைத்தண்டனையில் இருந்து தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த வாலிபர், கிறிஸ்டோபர் பிரிகோபியா. கிறிஸ்டோபர் தன்னைக் கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்ததாகவும், தனது கழுத்தில் குறியீடு வரைந்ததாகவும் அவரது தோழி ஒருவர் காவல் துறையில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து காவல்துறை கடந்த வருடம் இவரைக் கைது செய்தது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 99 வருட சிறைத்தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் போராட்டத்தில் குதித்தனர்.
சரியாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி அந்தப்பெண் புகார் கொடுத்திருந்தார். அதே நேரம் கிறிஸ்டோபர் அந்த பெண்ணின் வீட்டில் இருந்து சரியாக 65 மைல் தூரத்தில் தனது பெற்றோருடன் இருந்திருக்கிறார். அந்த தருணத்தினை அவர் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட, அதனை வைத்து நீதிமன்றத்தில் வாதாடி இளைஞரை சிறைத்தண்டனையில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.