2018-19 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்:-
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: மத்திய அரசின் பட்ஜெட், வளர்ச்சிக்கான நடுநிலையான பட்ஜெட்.
மு.க.ஸ்டாலின் (திமுக செயல்தலைவர்) : மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு. தமிழக மக்களின் நலன் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி (காங்.தலைவர்): 4 ஆண்டுகளை கடந்தும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை; நல்ல வேளை இன்னும் ஓராண்டுதான் ஆட்சி உள்ளது.
மருத்துவர் ராமதாஸ் (பாமக): பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு - பட்ஜெட் என்ற பெயரில் பறித்துக் கொண்டவற்றுக்கு ஆறுதல் படுத்த கொடுத்த லாலிபாப் போலும்!