வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டணம்
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 02, 2018 12:27 PM
சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலித்திட, உகாண்டா அரசு முடிவு செய்துள்ளது.
போலி செய்திகள் மற்றும் கிசுகிசுக்களை ஒழித்திடவும், நாட்டு வருமானத்தினை அதிகப்படுத்திடவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 1 முதல் இந்த புதிய கட்டணமுறை நடைமுறைக்கு வரும் என்றும், நாளொன்றுக்கு 200 ஷில்லிங் இதற்கு கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் பிபிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகாண்டா பாராளுமன்ற செய்தி தொடர்பாளர் க்ரிஸ் ஒபோர் இதுகுறித்து கூறுகையில் ''உகாண்டா மக்கள் அதிகளவு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது நாட்டின் வருவாய்க்கு இந்த மசோதா முக்கிய பங்களிக்கும் என்றும், அறிவிக்கப்பட்டு இருக்கும் வரி மிகவும் குறுகிய தொகை என்பதால் மக்களுக்கு இது அதிக சிரமமாக இருக்காது,'' எனவும் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- New app lets users see deleted WhatsApp messages
- Watch: Durham Cricket Club sings as a tribute to this CSK giant
- True story behind the viral photos in WhatsApp about alleged child traffickers
- 'எ(ன்)னை மாற்றும் காதலே'...எதையும் மாற்றும் காதலே!
- வாட்ஸ் ஆப்பைத் திறக்காமலேயே 'விரும்பியவருக்கு' மெசேஜ் அனுப்பும் வசதி!