
ஓடும் காரில் அத்துமீறல் ..'லெஸ்பியன்' ஜோடியை 'நடுரோட்டில்' இறக்கிவிட்ட டிரைவர்!
Home > News Shots > தமிழ்By Behindwoods News Bureau | Jun 14, 2018 03:23 PM

ஓடும் காருக்குள் முத்தம் கொடுத்ததால், நடுரோட்டில் லெஸ்பியன் ஜோடியை உபெர் டிரைவர் இறக்கிவிட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
எம்மா பிச்ல்(24), அலெக்ஸ் லோவின்(26) என்ற இரு பெண்களும் கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவின் புரூக்ளின் என்ற இடத்திலிருந்து மின்கட்டான் என்னும் இடத்திற்கு உபெர் காரில் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்டே பயணம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் காருக்குள்ளேயே அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனைக்கண்ட டிரைவர் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக நடுரோட்டில் இறக்கி விட்டு சென்றுவிட்டார்.
இதனைத்தொடர்ந்து உபெர் நிறுவனத்தில் அவர்கள் இருவரும் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட உபெர் நிறுவனம் அந்த டிரைவரின் லைசென்சை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
எம்மா-அலெக்ஸ் இருவரும் லெஸ்பியன் என்றும், இருவரும் 2 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
