மீண்டும் தொடங்கிய பருவமழை?.. சென்னை வெதர்மேன் விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 17, 2018 08:53 PM
Typical pre monsoon stand and deliver Thunderstorms in Chennai

சென்னையில் இன்று மதியம் மழை வெளுத்து வாங்கியது.இதனால் இதுவரை  வெப்பநிலை மாறி சென்னை தற்போது ஊட்டி போல குளுகுளுவென்று காணப்படுகிறது.

 

இந்தநிலையில் இந்த மழை பருவமழை  கேள்விக்கு சென்னை வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,''இது பருவமழை தொடக்கமாக இருக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

சில இடங்களில் மழை பெய்யாமலும், சில இடங்களில் கனமழையும் பெய்யும். மேகக்கூட்டங்கள் போகும் திசையை கணிக்க முடியவில்லை.வடசென்னையில்  நின்று போன மழை, மெல்ல நகர்ந்து மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் பெய்யும். ஆனால் கொஞ்ச நேரத்தில் நின்றுவிடும்,'' என தெரிவித்துள்ளார்.

Tags : #RAIN #HEAVYRAIN #WEATHER #CHENNAI #TAMILNADU