"என் மீது சிறுநீர் கழியுங்கள்"...சர்ச்சையில் அதிபரின் சிலை!
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 11, 2018 04:16 PM
டிரம்பிற்கும் சர்ச்சைகளுக்கும் வெகுதூரம் இல்லை.ஒன்று அவர் பேசுவது சர்ச்சையாகும். இல்லையேல் அவரை வைத்து சர்ச்சைகள் உருவாகும்.இந்த முறை சர்ச்சையானது அவரை வைத்து உருவாகி இருக்கிறது.இது கொஞ்சம் வித்தியாசமான பிரச்சனையாகவே மாறி இருக்கிறது.
அமெரிக்க நாட்டில் புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.அந்த சிலை வைக்கப்பட்டதில் பிரச்னை இல்லை.ஆனால் அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அந்த சிலையின் கீழே “ என் மீது சிறுநீர் கழிக்கவும்” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையினை பில் கேப்லே என்பவர் வடிவமைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் "டிரம்ப் ஒரு நல்ல அதிபராக செயல்படவில்லை. நாட்டிற்கான எந்த வளர்ச்சி திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.எனவே அந்த கோபத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு சிலை வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்கவில் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.